நீண்ட காலம் எதிர்பார்த்த வாட்ஸ்அப் அப்டேட்: புகைப்படங்களை இனி அப்படியே அனுப்பலாம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில், ஸ்மார்ட்ஃபோன்கள் வளர்ச்சி பெரிதாகிவிட்டது. அதிலும், வாட்ஸ் அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களை கவரும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனமும் அவ்வப்போது புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புகைப்படங்களை அதன் ஒரிஜினல் குவாலிட்டியில் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். பல வருடங்களாக பயனாளர்கள் அதன் ஒரிஜினல் குவாலிட்டியுடன் அனுப்ப முடியவில்லை என புலம்பி வந்தனர். அதற்கெல்லாம் முடிவு தரும் விதமாக தற்போது வாட்ஸ்அப் அதன் அசல் தரத்தில் புகைப்படத்தை பெறும் வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது.
பீட்டா பயனர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள்
இந்த வசதி முதலில் Beta பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. விரைவில் மற்ற பயனாளர்களுக்கும் வரும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனமானது வாய்ஸ் நோட்ஸ்களையும் ஸ்டேட்ஸ்களாக வைக்கும் வசதியை அண்மையில் அறிமுகம் செய்தது. அதேபோன்று, வாட்ஸ் அப்பில் delete for everyone-க்கு பதிலாக தவறுதலாக delete for me கொடுக்கும் நபர்களுக்காக undo வசதியையும் கொடுத்தது. பின் நமக்கு நாமே மெசேஜ் செய்துகொள்ளும் வசதியையும் கொடுத்தது. தற்போது இந்த இமேஜ் குவாலிட்டி அம்சத்தால் வாட்ஸ் அப் பயனாளர்கள் கொண்டாட்டத்திலேயே உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.