
வாய்ஸ் நோட்: புதிய அப்டேட்டை வழங்கும் வாட்ஸ் அப்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி, பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது.
அதில், கல்வி, தொழில், பணப்பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு புது புது அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆண்ட்ராய்டு பீட்டா யூசர்களுக்கு வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டஸில் வைக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், "உங்கள் தனியுரிமை அமைப்புகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட குறிப்பிட்ட பார்வையாளர்களுடன்" குரல் நிலை புதுப்பிப்புகளைப் பகிர இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது.
வாட்ஸ் அப் புதிய அம்சம்
ஆண்ட்ராய்டு பீட்டா பயனாளர்களுக்கு குரல் அம்சத்தை வெளியிடும் வாட்ஸ் அப்
மேலும், பீட்டா சேனலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு டெக்ஸ்ட் ஸ்டேடஸ்-ஆக வைக்கும் பிரிவில் வாய்ஸ் நோட்டை வைக்கும் அம்சம் கிடைக்கிறது.
வீடியோ, புகைப்படம் மற்றும் டெக்ஸ்ட் அறிவிப்புகள் போலவே, இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட்டும் 24 மணிநேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.
வாய்ஸ் நோட்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (E2EE) மூலம் பாதுகாக்கப்படுகின்றன. பயனர்கள் தங்கள் தனியுரிமை அமைப்புகளில் தங்கள் நிலையை யார் பார்க்கலாம் என்பதையும் தேர்வு செய்யலாம்.
சிறப்பம்சங்கள்
வாய்ஸ் நோட் அப்டேட்டில் ஆடியோ அதிகபட்சம் 30 வினாடிகள் இருக்கலாம்.
இந்த அம்சம் 'டிஸ்கார்ட் ரெக்கார்டிங்' என்ற விருப்பத்துடன் வருகிறது.
வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் வரும் வாரங்களில் அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.