புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்?
வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அடுத்ததாக பிளாக் ஷார்ட்கட் என்ற அம்சத்தை வழங்க உள்ளது. வாட்ஸ்அப் பின் அந்த புதிய அப்டேட்டாக இருந்தாலும், அது முதலில் பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும். பீட்டா பயனர்களின் முதல் கட்ட பயன்பாட்டுக்குப் பிறகு, பிழைகள் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், அனைத்து யூசர்களுக்கும் அப்டேட் ஆகும், WABetaInfo இன் தகவலின்படி, இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும் பணியில் வாட்ஸ்அப் நிறுவனம் இறங்கியுள்ளது. வித்தியாசமான முறையில் வாட்ஸ்அப் பயனருக்கு தெரியாத வகையில், நம்பத்தகாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே இந்த அம்சம் தெரியும்.
இந்த புதிய அம்சம் என்ன செய்யும்?
இந்த அம்சம் பயனர்கள் தங்கள் சேமித்த தொடர்புகளுக்கு அறிவிப்புகளுக்குப் பதிலளிக்கும் போது, பிளாக் அம்சத்தை தவறுதலாக தொட்டால் நிகழலாம். ஆனால், இந்த அம்சம் உரையாடலைத் திறக்காமல் நேரத்தைச் சேமிக்கும், மேலும் தேவையற்ற தொடர்புகளைத் தடுப்பது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதற்கு முன் WhatsApp தனக்கு தானே உரையாடலை அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பயனாளர்களை தனியுரிமை கொள்கைகள் பாதுகாப்பாக இருக்கவே அந்நிறுவன் புது புது அப்டேட்களை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.