வாட்ஸ் அப்பில் வரும் புதிய அம்சம்: தொந்தரவு செய்தால் பிளாக் செய்யலாம்
வாட்ஸ் அப் சாட்டில் தொந்தரவு செய்யும் நபர்களை சாட்டில் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும் அடிக்கடி புது புது அப்டேட்களை கொண்டு வருகின்றன. கிட்டத்தட்ட வாரம் ஒரு அப்டேட் என்ற ரீதியல் வாட்ஸ்அப்பில் பல விதமான அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. யூசர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்து, நிறுவனம் ஏகப்பட்ட மாற்றங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
வாட்ஸ் அப்பில் தொந்தரவு செய்தால் இனி பிளாக் செய்துவிடலாம்
அந்த வகையில், விரைவில் ஒரு அம்சத்தை கொண்டு வர உள்ளது. அதாவது வாட்ஸ் அப் சாட்டில் தொந்தரவும் செய்யும் நபர்களை சாட்டில் இருந்து பிளாக் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த அம்சம் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எதுவும் இன்னும் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிடவில்லை. எந்த அப்டேட் வந்தாலும் முதலில் வாட்ஸ்அப் பீட்டா யூசர்களுக்கு வெளியிடப்படும். அதில் பிழைகள் எதுவும் இல்லை என்று உறுதி செய்த பின்பு, அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.