இப்போது இணையம் முடங்கினாலும், கவலை இல்லாமல் வாட்சப் உபயோகிக்கலாம்
புது வருடத்தின், புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது வாட்சப். இந்த புதுப்பிப்பில், இணையம் முடங்கினாலும் வாட்சப் பயன்படுத்த முடியும் எனக்கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு, இணையம் முடங்கினாலும், ப்ராக்ஸி ஆதரவை கொண்டு, வாட்சப் உபயோகத்தை தொடரலாம் என கூறியுள்ளது. இந்த புதிய ப்ராக்ஸிகளை அமைக்க உதவும் ஒரு வழிகாட்டியையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக அடிக்கடி இணைய முடக்கம் நடைபெற்று வருவதால், இந்த புதுப்பிப்பை வழங்கி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த ப்ராக்ஸிகள், தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளால் அமைக்கப்படும் சர்வர்கள் மூலம் செயல்படும் என தெரிகிறது .
வாட்சப்பின் புதிய அம்சம்
ப்ராக்ஸியுடன் இணைப்பது எப்படி?
வாட்சப்பின் ப்ராக்ஸி ஆதரவு ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ ஸ் இரண்டிலும் கிடைக்கிறது. உங்கள் மொபைலில், சாட் ஸ்கிரீனில் உள்ள செட்டிங்ஸ்-இற்கு சென்று, ஸ்டோரேஜ் அண்ட் டாட்டா -> ப்ராக்ஸி -> யூஸ் ப்ராக்ஸி என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர், ப்ராக்ஸி முகவரியை உள்ளிட்டு, சேவ் செய்யவும் இணைப்பு வெற்றிகரமாக இருந்தால், பச்சை நிற டிக் தோன்றும்.