
வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன?
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களின் தேவைக்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் புது புது அப்டேட்களை வழங்கி வருகின்றன.
ஆனால், சில நேரங்களில் பயனர்கள் வாட்ஸ்அப் செயலிழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
அந்த வகையில், இந்தியாவில் சில பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை ட்விட்டரில் பல பயனர்கள் பதிவிட தொடங்கியுள்ளனர். அதில், ஒருவரிடமிருந்து பெறப்பட்ட வீடியோவைப் பதிவிறக்கும் போது பயனர்கள் பெரும்பாலும் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளியான அறிக்கையின் படி சுமார் 42% பயனர்கள் சர்வர் இணைப்பில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
வாட்ஸ்அப் செயலிழப்பு
இந்தியாவில் சில பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் எழுந்த சிக்கல் - தீர்வு என்ன?
39% பேர் செயலியில் செயலிழப்பைப் புகாரளித்துள்ளனர்., 19% பேர் செய்திகளை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த சிக்கல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. WhatsApp பீட்டா பதிப்பில் மட்டுமே இந்த சிக்கல் எழுந்தால் வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.
தீர்வு என்ன?
மேலும், இதற்கு தீர்வு என்னவென்றால், பெறப்பட்ட வீடியோக்களை வாட்ஸ்அப் வெப் அல்லது விண்டோஸிற்கான வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்வது பலனளிக்கும் எனக்கூறப்படுகிறது.