 
                                                                                வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! PIN வசதி அறிமுகம்;
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் மெட்டாவுக்கு வாட்ஸ்அப்பை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். சமீப நாட்களாகவ வாட்ஸ் அப்பில் பல அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில், முதலில் பீட்டா பயனாளர்களுக்கு அனுப்பப்பட்டு மற்ற பயனாளர்களுக்கு வெளிவருகின்றன. அந்த வகையில், தற்போது சாட் அல்லது குரூப்களுக்குள் தேவையான மெசேஜ்களை PIN செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி, பயனாளர்களுக்கு குறிப்பிட்ட சாட் மற்றும் தேவையானதை கண்டுப்பிடிக்க எளிமையானதாக இருக்கும். இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக Call Link- என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம்
அதன்படி WhatsApp செயலி மூலமாக தொடர்பு கொள்பவராக இருந்தால், தற்போது எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக Call Link-ஐ நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். இதனால் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களை, ஒவ்வொரு முறையும் செயலியை திறந்து, அந்த நபரின் பெயரை தேட வேண்டிய தேவையில்லை. அதேப்போன்று, மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் புகார்களை பதிவு செய்யவும், வாட்ஸ் அப் சாட்போட் அறிமுகப்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.