வாட்ஸ் அப் ஷார்ட்கட் வசதி! ரீசார்ஜ் செய்யாமலேயே கால் பேசமுடியுமா?
வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப் ஷார்ட்கட் வசதியை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது வாட்ஸ்அப் காலிங் அம்சங்களை வசதியாக மாற்றும் வகையில் புதிய வாட்ஸ்அப் ஷார்ட்கட் அழைப்பு (WhatsApp Shortcut Calling) வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது. இந்த அழைப்பு வசதி, புதிய அழைப்பு அம்சம் மூலம் பயனர்கள் எளிதாக காண்டாக்ட் நம்பர் லிஸ்ட் பட்டியலை அணுகலாம். மேலும், பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்காமலேயே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப் ஷார்ட்கட் காலிங் என்பது, நீங்கள் யாருடன் அதிகம் பேசுகிறீர்களோ அந்த பயனர்களுக்காக இருக்கும்.
வாட்ஸ் அப் ஷார்ட் கட் காலிங் வசதி அறிமுகம் - புதிய அம்சம் என்னென்ன?
அதாவது, இந்த புதிய அப்டேட் வந்தபிறகு, உடனடி மெசேஜ் அனுப்புவது போல் காலிங் செய்வதும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, வாட்ஸ் அப் எந்தவொரு அம்சத்தையும் அறிமுகம் செய்வதற்கு அதை பீட்டா பதிப்பில் சோதனை செய்வது வழக்கம். அதேப்போல், வாட்ஸ்அப்பின் 2.23.3.15 பதிப்பு அப்டேட்டில் அழைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிறுவனம் பல்வேறு புது அம்சங்களை பீட்டா பதிப்பில் சோதனை செய்து வருகிறது. பீட்டா சோதனை வெற்றியடைந்த பிறகு, இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.