Page Loader
பல சாதனங்களில் ஒரே கணக்கு.. புதிய வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்! 
பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப்

பல சாதனங்களில் ஒரே கணக்கு.. புதிய வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்! 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 26, 2023
09:09 am

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது பல புதிய வசதிகளை பயனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒரு வசதியாக பயனர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த ஒரு வசதியை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இதற்கு முன்னர் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி ஆகியவற்றில் ஒரே கணக்கை பயன்படுத்தும் வசதியைக் கொண்டுவந்திருந்தது. தற்போது தான் ஸ்மார்ட்போன்களில் ஒரே கணக்கை பயன்படுத்தும் வசதியை அளித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது நான்கு ஸ்மார்ட்போன்கள் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நம்மால் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவித்திருக்கிறது.

வாட்ஸ்அப்

எப்படிப் பயன்படுத்துவது? 

நமது முதன்மையான சாதனத்தில் இருந்து, கணினியில் வாட்ஸ்அப் கணக்கை இணைப்பது போலவே மொபைல்களிலும் க்யூஆர் கோடு மூலமாக பிற ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் கணக்கை இணைக்க முடியும். வாட்ஸ்அப் செயலியின் உள்ளே வலதுபக்க மூளையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து கொள்ளவும். பின்னர் 'Linked Devices' ஆப்ஷனை தேர்வு செய்து புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இணைத்துக் கொள்ளலாம். இணைத்த பிறகு தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதைப் போலவே அனைத்து சாதனங்களிலும் எந்தத் தடையும் இன்றி வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும். பாதுகாப்புக்காக, நாம் முதன்மையாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் சாதனத்தில் வாட்ஸ்அப் குறிப்பிட்ட காலத்திற்கு செயலற்று இருந்தால், மற்ற சாதனங்களிலும் தானாகவே சைன் அவுட் ஆகிவிடும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.