வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி பயனாளர்களின் பாதுகாப்பு கருதி புது புது அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியான அப்டேட்டில் ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடிகின்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் இனி இதற்காக கூகுள் டிரைவை சார்ந்து பயனர்கள் இருக்க வேண்டி இருக்காது. மேலும், பயனர்கள் தங்கள் சாதனத்தில் எடுக்கின்ற அதே ஒரிஜினல் ரெஸல்யூஷனில் போட்டோக்கள் பகிர முடியும் எனத் தெரிகிறது. இதற்கு முன் தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும்.
வாட்ஸ் அப் புதிய அப்டேட் என்ன? ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை பகிரமுடியும்
தற்போது புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, மேலும் சில அப்டேட்களையும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. அதில், முதலில், வாய்ஸ் ஸ்டேட்டஸ் எனும் அப்டேட்டில் பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை வைத்து கொள்ளமுடியும். அதன்பின், ஸ்டேட்டஸ் லின்க் பிரீவியூஸ் எனும் அப்டேட்டில் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ளவும் அப்டேட் செய்துள்ளது.