LOADING...
"இந்தியா தான் உலகிலேயே அழகு": ISS-லிருந்து இந்தியாவை படம்பிடித்த சுபன்ஷூ சுக்லா; காண்க
ISS-லிருந்து இந்தியாவை படம்பிடித்த சுபன்ஷூ சுக்லா

"இந்தியா தான் உலகிலேயே அழகு": ISS-லிருந்து இந்தியாவை படம்பிடித்த சுபன்ஷூ சுக்லா; காண்க

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2025
01:40 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, "இந்தியா தான் உலகிலேயே அழகான நாடு" என பெருமையுடன் தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா. வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் கூறியதாவது: "இது விண்வெளியில் இருந்து பாரதத்தை எடுத்த வீடியோ. நான் சுற்றுப்பாதையில் இருந்தபோது எடுத்த இந்த காட்சிகள், இந்த பயணத்தின் வித்தியாசமான அனுபவங்களை உங்களுடன் பகிர விரும்பியதாலே எடுத்தவை. இந்தியா உலகிலேயே மிக அழகாக காட்சியளிக்கிறது." என பதிவிட்டுள்ளார்.

காட்சிகள்

விண்வெளி வீடியோவில் பதிவான காட்சிகள்

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் - வலம்வரும் விண்வெளி நிலையத்திலிருந்து எடுத்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அது மழைக்காலம் என்பதால் நாட்டின் ஒருசில இடங்களில் மேக மூட்டம் மற்றும் மின்னல் வீச்சுகள் தென்படுகிறது. சூரிய உதயத்தின் பொற்கதிர்கள் பூமி மீது படர்வது தெரிகிறது. அதை அழகூட்டும் விதமாக பின்னணியில் தெளிவாக தெரியும் நட்சத்திரங்கள். மேலும், மின்னும் ஊதா ஒளியுடன் கூடிய இடியுடன் கூடிய மழை நாட்டின் பரந்த பகுதியை ஒளிரச் செய்கிறது. "வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்தான் இது. நீங்கள் இந்த வீடியோவை பார்ப்பதற்குள், **நீங்கள் என் இடத்தில் இருந்து விண்வெளியில் இருக்கிறீர்கள்** என்று நினைத்து பாருங்கள். நான் விரும்பியது அதுதான்." என அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post