வீடியோ: முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணையை ஒரு வெளிநாட்டுக்கு வழங்கியது இந்தியா
2022 இல் கையெழுத்திடப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இன்று பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கியது. பிலிப்பைன்ஸின் மரைன் கார்ப்ஸுக்கு ஆயுத அமைப்பை வழங்குவதற்காக இந்திய விமானப்படை, அதன் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தை ஏவுகணைகளுடன் பிலிப்பைன்ஸுக்கு அனுப்பியது. பிரம்மோஸ் ஏவுகணையை பெற வந்த பிலிப்பைன்ஸ் மரைன் கார்ப்ஸ் அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் இனிப்பு வழங்கினர். பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை அமைப்புக்கான தரை அமைப்புகளை ஏவுகணைகளுடன் ஏற்றுமதி செய்யும் பணி கடந்த மாதம் தொடங்கியது. பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெளிநாடுகளுக்கு வழங்குவது இதுவே முதல் முறையாகும்.