அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி!
உலகளவில் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின் பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக பொருளாதார சரிவு தான் எனக்கூறப்படுகிறது. எனவே, முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா, ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் வால்ட் டிஸ்னி நிறுவனம் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ஏற்கனேவ இந்நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 22,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இப்படி ஒரு நிலையில், மீண்டும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது. இவர்கள் தொலைக்காட்சி, தீம் பார்க் மற்றும் திரைப்பட பிரிவை சேர்ந்த கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளனர். இந்த அறிவிப்பு ஆனது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.