Page Loader
2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்!
மேலும் 10 ஆயிரம் ஊழியர்களை விட்டு அனுப்பும் மெட்டா நிறுவனம்

2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்!

எழுதியவர் Siranjeevi
Mar 15, 2023
10:03 am

செய்தி முன்னோட்டம்

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் கடந்த மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்திருந்தது. அதன்பின், மேலும் சில பேரை பணிநீக்கம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியானது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில், தற்போது பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பணியாளர்கள் முன்னிலையில் தெரிவிக்கையில், எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

மெட்டா நிறுவனம்

மீண்டும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். எனவே, மொத்த ஊழியர்களில் 10000 பேரை பணிநீக்கம் செய்யவும், பணியில் சேர்க்காமல் காலியாக இருக்கும் 5000 வேலைவாய்ப்புகளை முழுமையாக நீக்கவும் உள்ளது என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார். மேலும், பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் மற்றும் பரவலாக நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 2-வது முறையாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மிக பெரிய முதல் தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெற உள்ளது.