Page Loader
மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி
மெட்டாவின் அடுத்த கட்ட பணிநீக்கம் தொடங்கும்

மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Siranjeevi
Mar 07, 2023
11:16 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன் பின்னர் மீண்டும் புதிய சுற்றாக பணிநீக்கத்தில் இறங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 21, 2023 அன்று, மார்னே லெவின் தலைமை வணிக அதிகாரி பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் வெளியேறும் வரை பணியாளராக இருப்பார் என்று மெட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது மூன்றாவது குழந்தைக்காக பெற்றோர் விடுப்பில் செல்வதற்கு முன், இந்த பணிநீக்கம் தொடங்கப்படும் எனவும், அதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் எனவும், இது உடனடியாக இருக்கலாம் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பணிநீக்கத்தில் மீண்டும் இறங்கிய மெட்டா நிறுவனம்