இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ Y200 5G' ஸ்மார்ட்போன்
இந்தியாவில் தங்களுடைய Y சீரிஸில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது விவோ. 'Y200 5G' என்ற ஸ்மார்ட்போன் மாடலையே தற்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது Y200 5G? 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் அதிபட்ச வெளிச்சத்தைக் கொண்ட 6.67 இன்ச் AMOLED திரையைக் கொண்டிருக்கிறது புதிய Y200. மேலும், ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 இயங்குதளத்தை புதிய Y200-ல் கொடுத்திருக்கிறது விவோ. பின்பக்கம் 64MP முதன்மைக் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 16MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விவோ Y200 5G: ப்ராசஸர் மற்றும் விலை
புதிய Y200 5G-யில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது விவோ. இத்துடன் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்ட 4,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. கணெக்டிவிட்டிக்காக 5G, வை-பை 5, ப்ளூடூத் 5.1, GPS மற்றும் டைப்-சி போர்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த Y200 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.21,999 விலையில் ஃபிளிப்கார்ட் தளத்தின் மூலம் விற்பனை செய்யவிருக்கிறது விவோ. எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் கிரெட்டி மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ரூ.2,000 உடனடித் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.