இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் Y35 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது விவோ. அதன் அப்டேட்டட் வெர்ஷனான Y36 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிடபட்டிருக்கிறது.
Y35-ல் இருந்து பெரிய மாற்றங்கள் ஏதும் இன்றி சின்னச் சின்ன மாற்றங்களுடன் கிட்டத்தட்ட Y35 விற்பனையாகும் அதே விலையில், Y36 மாடலை விவோ வெளியிட்டிருக்கிறது.
முந்தைய மாடலை விட கொஞ்சம் பெரிய, 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்ப்ளிங் கொண்ட 6.64 இன்ட் LCD டிஸ்பிளேவை Y36-ல் பயன்படுத்தியிருக்கிறது விவோ.
2.5D கர்வ்டு பாடி மற்றும் ஃபிளாட் ஸ்கிரீன் டிசைன் கொண்ட இந்த Y36-ல், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது.
விவோ
விவோ Y36: ப்ராசஸர் மற்றும் விலை
Y35-ல் பயன்படுத்தப்பட்டிருந்த அதே ஸ்னாப்டிராகன் 680 ப்ராசஸரையே, புதிய Y36-லும் பயன்படுத்தியிருக்கிறது விவோ.
ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 13 ஆனது Y36-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்பிற்கக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை பக்கவாட்டில் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.
44W ஃபிளாஷ் சார்ஜ் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி Y36-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. Y35-லும் இதே பேட்டரியே பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்பக்கம் 50MP முதன்மைக் கேரமாவும், 2MP பொக்கே சென்சாரும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் ஒரேயொரு 8GB+128GB வேரியன்டானது ரூ.16,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற விவோ சில்லறை வணிகக் கடைகளின் மூலமும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படவிருக்கிறது.