Loading...
சூரியனின் மேற்பரப்பை விட வளிமண்டலம் வெப்பமாக இருப்பது ஏன்? 50 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த இனோயே தொலைநோக்கி புகைப்படங்கள்
சூரியனின் மேற்பரப்பை விட வளிமண்டலம் வெப்பமாக இருப்பதற்கான காரணம்

சூரியனின் மேற்பரப்பை விட வளிமண்டலம் வெப்பமாக இருப்பது ஏன்? 50 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த இனோயே தொலைநோக்கி புகைப்படங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த இனோயே சோலார் தொலைநோக்கி மூலம், சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பைக் காட்டும் மிகத் தெளிவான புதிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சூரிய புள்ளிகளுக்கு அருகில் உள்ள காந்தவியல் ரீதியாக செயல்படும் பகுதியில் 20 கிலோமீட்டர் வரையிலான மிகச்சிறிய நுட்பமான அம்சங்களைக் கூட இந்தத் தொலைநோக்கி மிகத் துல்லியமாகப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை சூரியனின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இதுவே மிகச் அதிகத் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களாகக் கருதப்படுவதாகத் தேசிய சூரிய கண்காணிப்பக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ரகசியம்

அரை நூற்றாண்டு கால விண்வெளி ரகசியத்திற்கு விடை

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி செல்சியஸாக இருக்கும் போது, அதற்கு வெளியில் உள்ள கொரோனா என்ற வளிமண்டலப் பகுதி மட்டும் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை மிக அதிக வெப்பத்துடன் இருப்பது பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளுக்குப் பெரும் புதிர் நீடித்து வந்தது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய புகைப்படங்கள் மூலம் சூரியனின் மேற்பரப்பில் நடக்கும் நுட்பமான செயல்முறைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதன் மூலம் சூரியனின் கொரோனா பகுதி ஏன் இவ்வளவு அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது என்ற அரை நூற்றாண்டு கால விண்வெளி ரகசியத்திற்கு விரைவில் முழுமையான தீர்வு கிடைக்கும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

சுழல் வடிவங்கள்

கெல்வின்-ஹெல்ம்ஹோல்ட்ஸ் சீர்குலைவு மற்றும் சுழல் வடிவங்கள்

சூரியனின் மேற்பரப்பில் அதிவேகமாக நகரும் பிளாஸ்மா, மெதுவாக நகரும் திரவப் பகுதியைக் கடந்து செல்லும்போது ஏற்படும் 'கெல்வின்-ஹெல்ம்ஹோல்ட்ஸ் சீர்குலைவு' (Kelvin-Helmholtz Instabilities) எனப்படும் சுழல் வடிவங்கள் இப்புகைப்படங்களில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பூமி, வியாழன் மற்றும் காரி கோள்களின் வளிமண்டலங்களில் மட்டுமே இதுவரை காணப்பட்ட இந்த சுழல் வடிவங்கள், சூரியனிலும் இருப்பதை நேச்சர் இதழில் வெளியான புதிய ஆய்வு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிறிய சுழல்கள் சூரிய பிளாஸ்மாவில் அலைகள் போன்ற சீர்குலைவுகளை ஏற்படுத்தி, தீவிரமான காந்தப்புல மாற்றங்களை உருவாக்கி சூரியனின் மேற்பரப்பைத் தொடர்ச்சியாகக் கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்கின்றன.

ADVERTISEMENT

தாக்கம்

காந்தப்புல பின்னல் மற்றும் சூரிய சுழல்களின் தாக்கம்

சூரியனில் ஏற்படும் சோலார் பிளேர்கள், கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் மற்றும் காந்தப்புலக் கோடுகள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்வதற்கு இந்தச் சிறிய சுழல் வடிவங்களே முதன்மையான காரணமாக இருக்கின்றன.

இவ்வாறு காந்தப்புலக் கோடுகள் பின்னப்பட்டு அதிக அழுத்தம் உருவாகும்போது, அவை திடீரென உடைந்து பிரம்மாண்டமான ஆற்றலை வெப்பமாக வெளிப்படுத்துகின்றன.

இந்த ஆற்றல் சிதறலே சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை பல மில்லியன் டிகிரி அளவிற்கு மிகக் கடுமையாக வெப்பமடையச் செய்கிறது.

மேலும், சூரியனில் நிகழும் இந்த அதிதீவிர காந்த வெடிப்புகள் பூமியில் உள்ள மின்சார விநியோக அமைப்புகள், செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு அமைப்புகளைப் பெருமளவில் பாதிக்கும் வல்லமை கொண்டவை.

ADVERTISEMENT