நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
ட்விட்டரில் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பிரபலத்தின் கணக்கு நம்பகத்தன்மை கொண்டு அல்லது அதிகாரப்பூர்வமனது என்பதைக் குறிக்கும் விதமாக நீல நில செக் மார்க் ஒன்றை வழங்கி வந்தது ட்விட்டர்.
இது முற்றிலும் நம்பகத்தன்மை மன்றும் பயனர்களின் வசதிக்காக ட்விட்டர் நிறுவனம் வழங்கிவந்தது. கடந்த நவம்பர் மாதம் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு வருவாயைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதில் இந்த நீல நிற செக் மார்க்கையும் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வசதியாக மாற்றினார்.
மேலும், இன்று முதல் ட்விட்டர் முன்னர் வழங்கிய செக் மார்க் அனைத்து பயனர்களின் கணக்கில் இருந்து நீக்கபடும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
ட்விட்டர்
செக் மார்க் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
ட்விட்டரின் நீல நில செக் மார்க்கை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது புதிதாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் ப்ளூ செக் மார்க்கை பெற முடியும்.
இதற்கு இணையதளப் பயனர் என்றால் ரூ.650 மாத கட்டணமாகவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் ரூ.900 மாத கட்டணமாகவும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் நீல நிற செக் மார்க் என்பது முன்னர் நம்பகத்தன்மையின் அடையாளமாக இருந்தது.
கட்டண முறையில் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றால், இதற்கானே மதிப்பே இல்லாமல் போய்விடும் என ட்விட்டர் பயனர்கள் இந்த மாற்றம் குறித்து அத்தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.