ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது?
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணத்தையும் நிர்ணயித்து இருந்தார். அதேபோன்று, சமீபத்தில் பழைய வெரிஃபைடு முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாகவும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், புளூ சந்தாவை பெற விரும்புவர்கள் அதை வாங்கியபின் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று நினைத்தால், அவர்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது புளூ சந்தா பெற்றவர்கள் வெளிப்படுத்தா வேண்டாம் என்றால், அதை மறைக்கும் வசதி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அம்சம் விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. மேலும், புளூ டிக்கை கட்டுப்படுத்தும் வகையில், புதிய ஆப்ஷனை ஆராய்ச்சியாளர் Alessandro Paluzzi உருவாக்கியுள்ளார்.