இந்தியாவிற்கு வந்தது ட்விட்டரின் ப்ளூ டிக்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ சந்தாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்தியா உள்பட பல உலக நாடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் உள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வந்தார்.
அதில், ஒன்று தான் ப்ளூடிக் மாற்றம். இலவசமாக பலரும் பயன்படுத்தி வந்த ப்ளூடிக்கிற்கு கட்டணத்தை விதித்தார்.
இந்த நிலையில், தான் ட்விட்டர் ‛ப்ளூடிக்' வசதியை சுயமாக பெறும் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் உள்ள பயனர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தினால் வாங்கமுடியும்.
Verify செய்யப்பட்ட தொலைபேசி எண்களைக் கொண்ட சந்தாதாரர்கள் தங்கள் ப்ரொபைலில் தானாகவே நீல நிறத்தில் சரிபார்க்கப்பட்ட பேட்ஜைப் பெறுவார்கள்.
ட்விட்டர் ப்ளூடிக்
ட்விட்டரின் ப்ளூடிக் மாதாந்திர கட்டணம்
மேலும், இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது.
அதன்படி, இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவரும் மெம்பர்ஷிப்பை பெற முடியும்.
அதேப்போன்று, வருடாந்திரத் திட்டத்தைப் பெற்றால், ட்விட்டர் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை ஆண்டுக்கு ரூ. 6,800, அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.566.67 ஆகும்.
90 நாட்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே ட்விட்டர் ப்ளூ டிக் பதிவு செய்ய முடியும்.
அனைத்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களும் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி verify செயல்முறையை நிறைவேற்ற வேண்டும்.