ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு!
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இத்தனை வருடம் இலவசமாக தந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் கட்டணமாக மாற்றி இருக்கிறார். ப்ளூடிக் என்பதற்கு பல அடையாள உள்ள பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், அனைவரும் பயன்படுத்தவும், வருமானம் ஈட்டவும் எலான் மஸ்க் முடிவு செய்து கட்டணத்தை விதித்தார். இதன்மூலம் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷநுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் என அறிவித்த நிலையில், தற்போது 11 டாலராகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ட்விட்டர் வாடிக்கையாளர்கல் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிற்குமே ஒரே கட்டணத்தை அறிவித்துள்ளது. இந்த கட்டண சலுகையில், முதலில் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்குத் தான் மாதம் 11 டாலர் என்ற கட்டணத்தை அறிவித்திருந்தது.
ட்விட்டர் ப்ளூடிக் கட்டணத்தை 8 இருந்து 11 ஆக உயர்வு செய்த எலான் மஸ்க்
அதன்பின்னர், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் அதாவது ப்ளூ டிக் வெரிபிகேஷன்-ஐ மாதம் 11 டாலர் விலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முடிவு செய்துள்ளது. மேலும், வெப் யூசர்களுக்கு வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை 84 டாலர் என்ற மலிவான விலையில் கொடுக்கத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தள்ளுபடி விலை திட்டம் முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெப் யூசர்களுக்குக் கிடைக்கும் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாருக்கு எந்த நிறம்? நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் பேட்ச்-ம், அரசாங்கத்தைச் சார்ந்த அமைப்புகளின் கணக்கிற்குச் சாம்பல் நிற பேட்ச்-ம், தனிநபர்களுக்கு நீல நிற பேட்ச்-ம் வழங்கப்படுகிறது.