Page Loader
ட்விட்டருக்கு அடுத்த ஆப்பு - விளம்பரங்களை நிறுத்திய வணிகங்கள்!
ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரங்கள் நிறுத்தம்

ட்விட்டருக்கு அடுத்த ஆப்பு - விளம்பரங்களை நிறுத்திய வணிகங்கள்!

எழுதியவர் Siranjeevi
Jan 19, 2023
07:08 pm

செய்தி முன்னோட்டம்

டிவிட்டர் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஓராண்டில் சுமார் 40% வரை சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சவால்களை சந்தித்து வந்திருக்கிறது. எலான் மஸ்க் டிவிட்டரை சுமார் ரூ.3.5 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார்.முதல் கட்டமாக சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல உயர் அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கினார். இத்துடன் நின்றுவிடாமல் சுமார் 3,700 ஊழியர்கள் வரை நீக்கப்பட்டனர். இப்படி பல சலசலப்புகளுக்கு இடையே நிறுவனத்தின் வருவாய் கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த ஆண்டின் முதலிரண்டு காலாண்டில் டிவிட்டரின் வருவாய் பெருமளவில் சரிந்தது.

ட்விட்டர் விளம்பரம்

ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரங்களை அதிரடியாக நிறுத்திய வணிகங்கள்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து முடிந்தபாடில்லை. இந்நிலையில், 500-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் ட்விட்டரில் விளம்பரங்களை நிறுத்திவிட்டனர். அரசியல் விளம்பரங்கள் மீதான தடையையும் தளர்த்தியது. டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் எனவே அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கிறோம் என 2019ல் டிவிட்டர் அறிவித்திருந்தது. எனவே, டிவி மற்றும் பிற ஊடகங்களின் கொள்கையுடன் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. இவ்வளவும் செய்தும் கூட வருவாய் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை. கடந்த ஓராண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 40% குறைந்துள்ளது.