ட்விட்டரா? இன்ஸ்டாகிராமா? எலான் மஸ்க்கின் சர்ச்சை பதிவு;
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், எலான் மஸ்க் நடத்திய கருத்து கணிப்பு ஒன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ட்விட்டர் நிறுவன தலைவர் மற்றும் தொழிலதிபரான எலான் மஸ்க் பற்றிய சர்ச்சை கருத்துகள் அடிக்கடி வெளிவருவது வழக்கம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எலான் மஸ்க் பற்றி செய்தி வெளி வாராத நாளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு எலான் மஸ்க், டிவிட்டர் புதுப்பிப்புகள், பணி நீக்கம், என்று தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரியவும் உத்தரவிட்டார். எலான் மஸ்க்கின் டுவிட்டர், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகின்றன.
எலான் மஸ்க் ட்விட்
எது சிறந்த வலைத்தளம் எலான் மஸ்க்கின் சர்ச்சை கருத்து
இந்நிலையில், கடந்த நாளில், 16 ஆம் தேதி டுவிட்டரில் ஒரு கேள்வி எழுப்பி டுவீட் செய்தார் எலான் மஸ்க். அந்த பதிவில், "இன்ஸ்டாகிராம் மக்களை மனச்சோர்வடையச் செய்கிறது மற்றும் ட்விட்டர் மக்களை கோபப்படுத்துகிறது. மேலும், எது சிறந்தது?' என கேள்வி எழுப்பினார். எலான் மஸ்க்கின் இந்தக் கேள்விக்கு சுமார் 1.3 லட்சம் பேர் கமெண்ட் செய்துள்ளனர். பலரும் எதிர்ப்பு கருத்துக்களை கூற, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் மேம்படுத்தவே இப்படி பதிவிட்டுள்ளார் என கூறி வருகின்றனர்.