
பயனாளர்களுக்காக எலான் மஸ்க் ட்விட்டரில் கொண்டு வந்த 5 முக்கிய மாற்றங்கள்;
செய்தி முன்னோட்டம்
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் 5 முக்கிய மாற்றங்களை கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
ப்ளூ டிக்
ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
இதனால் பல மாத திட்டமிடல் உடன் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் புதிய வெரிபிகேஷன் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
வெரிபிகேஷன் முறை
புதிய வெரிபிகேஷன் முறையில் பொதுவான நீல நிற அடையாளத்தை நீக்கிவிட்டு, நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு வெவ்வேறு வண்ண வெரிபிகேஷன் டிக் பேட்ஜ்களை வழங்க உள்ளது.
ட்விட்டர்
எலான் மஸ்க் ட்விட்டரில் அதிரடி மாற்றம்
வண்ண வண்ண டிக்ஸ்
ப்ளூ டிக் ஒரு அடையாளமாக காணப்பட்ட நிலையில், பிராண்டுகள் மற்றும் அரசாங்க புள்ளி விவரங்களுக்கான தங்கம் அல்லது வெள்ளி டிக் மூலம் இது மாற்றப்பட்டுள்ளது. எனவே, கோகோ கோலா தங்க நிறமாக உள்ளது, இது ஒரு அதிகாரப்பூர்வ வணிகம் என்பதற்காக இந்த நிறம் என கூறுகின்றனர்.
அதேப்போல், இங்கிலாந்தின் பிரதமர் மந்திரி ரிஷி சுனக்கின் கணக்கும் இப்போது வெள்ளி நிற பேட்ஜைக் கொண்டுள்ளது.
3 நிறம்
நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் பேட்ஜும், அரசாங்கத்தைச் சார்ந்த அமைப்புகளின் கணக்கிற்குச் சாம்பல் நிற பேட்ஜும், தனிநபர்களுக்கு நீல நிற பேட்ஜும் வழங்கப்படுகிறது.
க்யூரேஷன்
பயனாளர்கள் டைம்லைனில் தோன்றும் ட்வீட்களை பார்க்கும் வரிசையே மிக தெளிவாக இருக்க இந்த க்யூரேஷன் பயன்படுத்தப்பட்டு உள்ளது.