
ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியவும், வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
ட்விட்டர் நிறுவன அதிகாரியான எலான் மஸ்க் கடந்த நாட்களுக்கு முன் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அலுவலகத்தில் இருந்தே வேலை செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே எலான் மஸ்க் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து, வாரத்தில் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.
சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் ஊழியர்கள் இன்றி காலியாக இருந்துள்ளது என்பதும் இதற்குக் காரணம். இதனால் இனி மஸ்க் கடும் நடவடிக்கை எடுக்கபோவதாகவும் கூறப்படுகிறது.
அதேப்போல், ஆப்பிள் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ட்விட்டர் மற்றும் ஆப்பிள்
வீட்டில் இருந்து பணிபுரிவதை எதிர்க்கும் ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம்
அலுவலகம் வந்து பணிபுரியவும் இல்லையெனில் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் பணிநீக்கத்தை செய்தாலும், பணியை மேம்படுத்த கடுமையாக செயல்பட்டு வருகிறது. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த போனஸ், சம்பள குறைப்பையும் செய்து வருகிறது.
மேலும், வாரத்திற்கு மூன்று நாட்கள் பணிக்கு வரவேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பல டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், வீட்டில் இருந்து பணிபுரிவதையும் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். உலகளவில் தொழில்நுட்ப மந்திலை காரணமாகவே இந்தமுடிவை எடுத்து வருகிறார்கள்.