பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை!
சென்ற ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், ஒப்பந்த ஊழியர்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக,Twitter Inc வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. இந்த வழக்கு, சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ட்விட்டரானது, TEKsystems Inc என்ற அமைப்பின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஏராளமான தொழிலாளர்களை, US மற்றும் கலிபோர்னியா சட்டத்தின் படி 60 நாட்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதோடு, ட்விட்டர், சட்டத்தை மீறியதாகவும், குறிப்பாக பெண் தொழிலாளர்களை குறிவைத்து பணிநீக்கம் செய்ததாகவும், ஊனமுற்ற ஊழியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாகவும், நீதி மன்றத்தில் மேலும் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதை ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.