அடுத்த செய்திக் கட்டுரை

ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் - கதறும் பயனர்கள்
எழுதியவர்
Siranjeevi
Apr 04, 2023
10:33 am
செய்தி முன்னோட்டம்
உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார்.
இதனைத்தொடர்ந்து, ட்விட்டரின் புளூ டிக் சந்தாதாரர்களுக்கு கட்டண சலுகையை நிர்ணயித்தார். இதனால் தனிநபர்களுக்கு நீல நிறமும், வணிகர்களுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்தவர்களுக்கு க்ரே நிறமும் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ட்விட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
அதாவது, ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு, பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.
செய்தி இத்துடன் முடிவடைந்தது