வானத்தில் நடக்கப்போகும் மற்றொரு அதிசயம்: பிரகாசமாக மாறும் Tsuchinshan-அட்லாஸ் வால் நட்சத்திரம்
செய்தி முன்னோட்டம்
Tsuchinshan-ATLAS (C/2023 A3) என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் பிரகாசமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது முழு சூரிய கிரகணம் மற்றும் தீவிர சூரிய சூப்பர் புயல்கள் போன்ற சமீபத்திய வான நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெறும் மற்றொரு வனத்தின் ஆச்சரிய நிகழ்வு.
தற்போது, வால் நட்சத்திரம் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே பயணிக்கும் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது சாதாரணமாகவே கண்ணுக்கு புலப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போதைக்கு, அதை பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே கவனிக்க முடியும்.
பின்னணி
வால் நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு மற்றும் தோற்றம்
Tsuchinshan-ATLAS (C/2023 A3) கடந்த 2023 இன் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது இரண்டு தனித்தனி வானியல் ஆய்வுகள் மூலம் காணப்பட்டது - சீனாவில் உள்ள சுச்சின்ஷான் (பர்பிள் மலை கண்காணிப்பகம்) மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறுகோள் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) ஆகியவற்றால் கண்டறியப்பட்டது.
80,000 ஆண்டுகளுக்கும் மேலான சுற்றுப்பாதையுடன், இந்த நீண்ட கால வால்மீனின் தோற்றம், நமது சூரிய மண்டலத்தின் தொலைதூர பகுதியான ஊர்ட் கிளவுட்டில் உருவானது.
அக்டோபரில் வால் நட்சத்திரம் குறிப்பிடத்தக்க அளவில் பிரகாசமாகி, இரவு வானில் வீனஸ் கிரகத்தைப் போல ஒளிரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பாதை
Tsuchinshan-ATLAS அக்டோபர் மாதத்தில் வானத்தில் பிரகாசமாக மின்னும்
அக்டோபரில் வால் நட்சத்திரம் குறிப்பிடத்தக்க அளவில் பிரகாசமாகி, இரவு வானில் வீனஸ் கிரகத்தைப் போல ஒளிரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரம் இந்த ஆண்டின் வால் நட்சத்திரம் என கூறப்படுகிறது. அல்லது நூற்றாண்டின் வால்நட்சத்திரமாக கூட இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Tsuchinshan-ATLAS பெரிஹேலியனை நெருங்கி, அக்டோபர் 10, 2024 அன்று சூரியனை நெருங்கும் போது, சமீபத்திய ஆண்டுகளில் பிரகாசமான வால்மீன்களில் ஒன்றாக மாறக்கூடும்.
இந்த தேதியைத் தொடர்ந்து, வானில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, தென்மேற்கிலிருந்து வடக்கு அரைக்கோளத்தில் இது பார்வைக்கு தெரியும்.
இருப்பினும், விண்மீன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். அதன் பிரகாசத்தில் கூட, Tsuchinshan-ATLAS அடிவானத்தில் தாழ்வாகத் தோன்றும். வடக்கு அரைக்கோளத்தில் மூடுபனியால் மறைக்கப்படுவதற்கும் சாத்தியங்கள் உண்டு.