தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்த நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 24ம் தேதிபடி ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.5,235ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக சரிவு - இன்றைய விலை விபரம்
இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.70.90 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 குறைந்து ரூ.70,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1000-க்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.