தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. அப்போது, தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். பண்டிகை நாட்களில் தங்கத்தை வாங்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை ஏற்றத்தை விட இறக்கத்தை அதிகம் சந்தித்து இருக்கின்றது. அந்த வகையில், இன்றைய நாள் மார்ச் 10 ஆம் தேதிபடி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே
மேலும், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,190க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.67.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.