தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 09 ஆம் தேதிபடி, 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5517 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே
அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,136 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5155 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,240 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.