
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது.
அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது.
இந்நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 21ம் தேதிபடி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைவு - விலை விபரங்கள் இங்கே
அதேப்போல், ஒரு கிராம் வெள்ளியின் மாற்றமின்றி ரூ.71.70 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.
மேலும், சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.
அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.