Loading...
இந்திய ஐடி துறையில் 6-இல் ஒருவருக்கு மட்டுமே ஏஐ திறன்கள்: டீம்லீஸ் டிஜிட்டல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
37,000 தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் வேலைவாய்ப்புகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

இந்திய ஐடி துறையில் 6-இல் ஒருவருக்கு மட்டுமே ஏஐ திறன்கள்: டீம்லீஸ் டிஜிட்டல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணியாற்றும் ஆறு வல்லுநர்களில் ஒருவருக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு(AI) சார்ந்த உயர் திறன்கள் இருப்பதாக டீம்லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற முதன்மை நிறுவனங்களில் உள்ள 37,000 தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் வேலைவாய்ப்புகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

37,000 வேலைவாய்ப்புகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு

நாட்டில் சுமார் 20 லட்சம் ஐடி ஊழியர்கள் AI கருவிகளை பயன்படுத்த பயிற்சி பெற்றுள்ள போதிலும், நிறுவனங்களுக்குத் தேவையான ஏஐ அமைப்புகளை உருவாக்கவும், நிர்வகிக்கவும் கூடிய மேம்பட்ட திறன்களை பெற்றவர்கள் சுமார் 3 லட்சம் (16%) பேர் மட்டுமே.

ஏஐ கருவிகளை பயன்படுத்தத் தெரிந்திருப்பது இனி ஒரு சாதாரண தகுதியாக மட்டுமே கருதப்படும் என்றும், ஏஐ தொழில்நுட்பங்களை நேரடியாக கட்டமைக்கும் திறன் கொண்டவர்களுக்கே சந்தையில் அதிக முக்கியத்துவமும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்றும் டீம்லீஸ் டிஜிட்டல் சி.இ.ஓ நிதி சர்மா தெரிவித்துள்ளார்.

பிரிவுகள்

ஊழியர்களின் 3 புதிய பிரிவுகள் மற்றும் சம்பள விகிதம்

தொழில்நுட்ப பணியாளர்களை டீம்லீஸ் நிறுவனம் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது:

1. GenAI மற்றும் மெஷின் லேர்னிங்(ML) அமைப்புகளை உருவாக்கும் முதன்மை பொறியாளர்கள். இவர்களுக்கான ஆரம்பக்கட்ட ஊதியம் ₹11.2 லட்சம் முதல் ₹13.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. 6-8 ஆண்டுகள் அனுபவம் உடையவர்களுக்கு சம்பளம் ₹34.5 லட்சம் வரை உயர்கிறது.

2. டேட்டா, கிளவுட் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் AI-ஐ இணைத்து செயல்படுபவர்கள். இவர்களின் ஆரம்ப ஊதியம் ₹9 லட்சம் முதல் ₹10.2 லட்சம் வரை உள்ளது.

3. இக்கட்டமைப்புகளைக் கண்காணிக்கும் பணியாளர்கள். இவர்களது ஆரம்ப ஊதியம் ₹4.8 லட்சம் முதல் ₹5.4 லட்சம் வரை மட்டுமே உள்ளது.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு

ஆரம்பக்கட்ட வேலைவாய்ப்புகளில் சுருக்கம்

அனுபவத்தை காட்டிலும் திறன்களின் கூட்டமைப்பே தற்போதைய ஐடி துறையில் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.

வழக்கமான சாதாரண ஐடி வேலைவாய்ப்புகளின் தேவை குறைந்து வருவதால், ஆரம்பக்கட்ட வேலைவாய்ப்புகளின் அடுக்கு சுருங்கி, திறமையான ஏஐ வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT