புதிய அப்டேட்: ட்விட்டரில் புதிய ஸ்வைப் சைகை அறிமுகம்
இந்த ஜனவரி மாதத்தில், ட்விட்டரில் ஒரு புதிய நேவிகேஷன் வழிமுறையை அறிமுகப்படுத்த போவதாக, அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பயனர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட ட்வீட்கள், தலைப்புகள் மற்றும் பலவற்றிற்கு இடையில் மாறுவதற்கு, பக்கவாட்டில் ஸ்வைப் செய்தால் போதும் என அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இந்த புதுப்பிப்பு, எப்போது பயன்பாட்டிற்கு வரும் என குறிப்பிட்ட தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முகப்பு மற்றும் சமீபத்திய ட்வீட்களுக்கு இடையில் மாற, பயனர்கள், ஹோம் பக்கத்தில், மேல் வலது மூலையில் உள்ள நட்சத்திர ஐகானைத் தட்டுமாறு, மஸ்க் .
ட்விட்டரில் ஸ்வைப் மூலம் இயக்கும் புதிய வசதி
ட்விட்டர் புதுப்பிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்
குறிப்பிட்ட ஒரு பயனருக்கு பதிலளித்த எலன், " நாங்கள் ட்விட்டரில் AI ஐ மேம்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட ட்வீட்கள், பட்டியல்கள் ஆகியவை அற்புதமாக உங்களுக்கு காண்பிக்கப்படும்". இப்போதைக்கு, ட்வீட்களைப் பரிந்துரைக்கும் காலவரிசை மற்றும் முகப்புக்கு இடையில் மாற, மேல்-வலது மூலையில் உள்ள நட்சத்திர ஐகானை உபயோகிக்கலாம். வரவிருக்கும், புதிய சைகை அடிப்படையிலான நேவிகேஷன், அமைப்பு பட்டியல்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார். சமீபத்தில், ட்வீட் செய்யப் பயன்படுத்தப்படும் சாதனத்தின் வகையைக் காட்டும் டேக்-ஐ, ட்விட்டர் அகற்றியது. பயனர்கள் முன்பு 'ஐபோனுக்கான ட்விட்டர்' அல்லது 'ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர்' என்பதைப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அந்த டேக் அகற்றப்பட்டுள்ளது. கூடுதலாக, ட்விட்டர், எந்த ட்வீட்டின் வியூஸ்-ஐயும், பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.