NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு
    தனது பணியில் மேலும் தாமதத்தை நாசா அறிவித்துள்ளது

    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2024
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான தனது பணியில் மேலும் தாமதத்தை நாசா அறிவித்துள்ளது.

    மூத்த விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் மீள் வருகை மார்ச் 2025 இன் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருவரும் ஜூன் 2024 இல் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ISS க்கு தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

    சிக்கல்கள்

    ஸ்டார்லைனர் விண்கலத்தின் தொழில்நுட்ப சிக்கல்கள் விண்வெளி வீரர்களின் பயணத்தை நீடிக்கிறது

    வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆரம்பத்தில் ISS இல் எட்டு நாட்கள் செலவிடவே சென்றனர்.

    இருப்பினும், ஸ்டார்லைனரின் உந்துவிசை அமைப்பு பயணத்தின் நடுப்பகுதியில் சிக்கல்களை எதிர்கொண்டதால், நாசா தனது திட்டங்களை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

    ஸ்டார்லைனரை பல வாரங்கள் சோதித்த பிறகு, நாசா அதன் குழு உறுப்பினர்கள் இல்லாமல் அதை பூமிக்கு கொண்டு வர முடிவு செய்தது.

    க்ரூ-9 எனப்படும் ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் மூலம் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களையும் வீட்டிற்கு அழைத்து வர தற்போது திட்டமிடப்பட்டது.

    புதிய உத்தி

    விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான திருத்தப்பட்ட திட்டம்

    வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு இரண்டு காலி இருக்கைகளுடன் க்ரூ-9 இல் இரண்டு விண்வெளி வீரர்கள் செப்டம்பர் 2024 இன் பிற்பகுதியில் டிராகன் விண்கலத்தில் ISS ஐ அடைந்தனர்.

    2025 பிப்ரவரியில் நால்வரும் பூமி திரும்ப வேண்டும் என்பதே மீட்பு திட்டம்.

    ஆனால் இப்போது, ​​க்ரூ-9 -ஐ விடுவித்து, சிக்கித் தவிக்கும் ஜோடியை மீட்க க்ரூ-10 அனுப்பப்படும் எனவும், அது குறைந்தது மார்ச் 2025 வரை ஏவப்படாது என்று நாசா அறிவித்துள்ளது.

    இரு அணிகளும் இந்த மாற்ற காலத்தில் ISS -இல் இருப்பார்கள்.

    கால நீட்டிப்பு

    வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் காலம் விண்வெளியில் நீடிக்கப்பட்டது

    இந்த தாமதத்தினால் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் முதலில் திட்டமிட்ட எட்டு நாளை தாண்டி தற்போது, ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் செலவிடுவார்கள்.

    திட்டங்களின் மாற்றம் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் குழுக்களுக்கு புதிய டிராகன் விண்கலத்தில் செயலாக்கத்தை முடிக்க போதுமான நேரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஸ்பேஸ்எக்ஸ், எலான் மஸ்க் நிறுவிய ஒரு தனியார் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஐஎஸ்எஸ் குழுக்களின் சுழற்சியை எளிதாக்குவதற்கு வழக்கமான பணிகளை நடத்தி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    சர்வதேச விண்வெளி நிலையம்
    விண்வெளி
    சுனிதா வில்லியம்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நாசா

    இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு, ஆகஸ்ட் முதல் நாசாவில் பயிற்சி தொடக்கம்  இஸ்ரோ
    லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4K வீடியோவை ISSக்கு ஸ்ட்ரீம் செய்த நாசா சர்வதேச விண்வெளி நிலையம்
    ஜூலை மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்ப வாய்ப்பில்லை  தொழில்நுட்பம்
    அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா? நிலவு ஆராய்ச்சி

    சர்வதேச விண்வெளி நிலையம்

    சிக்கித் தவிக்கும் ஸ்டார்லைனர் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் மீட்க முடியுமா? விண்வெளி
    430,000 கிலோ எடையுள்ள ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
    செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு செயற்கைகோள்
    விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி விண்வெளி

    விண்வெளி

    விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான் ஈரான்
    அதிபர் தேர்தலில் வாக்களிப்பு; விண்வெளியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ்
    முதல் தனியார் விண்வெளி நடை பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் விண்கலம் ஸ்பேஸ்எக்ஸ்
    பூமியை சுற்றப் போகும் இரண்டாம் நிலவு; அதற்கும் மகாபாரத அர்ஜுனனுக்கும் இப்படியொரு தொடர்பா! பூமி

    சுனிதா வில்லியம்ஸ்

    ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் ஸ்டார்லைனர்
    சுனிதா வில்லியம்ஸ் எப்போது திரும்புவார்? இன்று NASA தெரிவிக்கக்கூடும்  தொழில்நுட்பம்
    நாசாவின் புதிய புதுப்பிப்பு, சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்பும் நம்பிக்கையை வழங்குகிறது நாசா
    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை நாசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025