Page Loader
எதற்காக 'Product (Red)' தயாரிப்புகளை வெளியிடுகிறது ஆப்பிள்? அதன் பின்னணி என்ன?
எதற்காக 'Product (Red)' தயாரிப்புகளை வெளியிடுகிறது ஆப்பிள்

எதற்காக 'Product (Red)' தயாரிப்புகளை வெளியிடுகிறது ஆப்பிள்? அதன் பின்னணி என்ன?

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 04, 2023
09:37 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ராடக்ட் (ரெட்) ((Product) Red) வாட்ச் சீரிஸ்9 ஸ்மார்ட்வாட்சை வெளியிட்டது ஆப்பிள். எப்போதும் தங்களுடை ஐபோன்கள் மற்றும் பிற கேட்ஜட்களின் வெளியீட்டிற்குப் பிறகு ப்ராடக்ட் ரெட் மாடல்களை வெளியிடுவது ஆப்பிளின் வழக்கம். அடர்சிவப்பு நிறத்திலான ப்ராக்ட் ரெட் தயாரிப்புகளை ஏன் வெளியிடுகிறது ஆப்பிள்? அதன் பின்னணி என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த 'ரெட்' (Red) நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஒரு பிராண்டு தான் ப்ராடக்ட் (ரெட்). ஆப்பிள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி வணிக நிறுவனங்களுடைய கூட்டணி அமைத்திருக்கிறது இந்த லாபநோக்கமற்ற நிறுவனம். பேனசானிக், ஸ்டார்பக்ஸ், லூயில் வுட்டான், நைக், கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் (ரெட்) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கின்றன.

ஆப்பிள்

ப்ராடக்ட் (ரெட்): 

'ரெட்' நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த நிறுவனங்கள், தங்களுடைய பிராண்டின் கீழ் ப்ராடக்ட் (ரெட்) பிராண்டையும் இணைத்து சில தயாரிப்புகளை வெளியிடும். அந்தத் தயாரிப்புகளின் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50%, உலகளாவிய நிதியை (The Global Fund) சென்று சேரும். கடந்த 17 ஆண்டுகளாக ப்ராடக்ட் (ரெட்) பிராண்டின் கீழ் ஐபோன், ஸ்மார்ட்வாட்ச், ஆப்பிள் கேஸ் மற்றும் ஹெட்போன் என பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்தக் குறிப்பிட்ட ப்ராக்ட் (ரெட்) தயாரிப்புகள் விற்பனையின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு, ரூ.2,080 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறது ஆப்பிள். இந்த ரெட் நிறுவனமானது அயர்லாந்தின் U2 இசைக்குழுவைச் சேர்ந்த போனோ மற்றும் செயற்பாட்டாளர் பாபி ஷிரிவரால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிகம்

உளகளாவிய நிதி அமைப்பு: 

உலகளாவிய நிதி (The Global Fund) அமைப்பானது 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் எய்ட்ஸ், ட்யூபர்குளோசிஸ் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்ப்பரவலைத் தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது இந்த அமைப்பு. இன்று உலகளவில் எய்ட்ஸை ஒழிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான 20% நிதி, ட்யூபர்குளோசிஸை ஒழிப்பதற்கான 69% நிதி மற்றும் மலேரியாவை ஒழிப்பதற்கான 65% நிதியானது உலகளாவிய நிதி அமைப்பின் மூலமே வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலைத் தொடர்ந்து, கொரோனா ஒழிப்பு மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நிதி உதவி செய்து வருகிறது இந்த அமைப்பு.