இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட்
இந்தியாவில் தங்களுடைய அடுத்த தலைமுறை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான 'பிளேஸ்டேஷன் VR2'-வை வெளியிட்டிருக்கிறது சோனி. இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட இந்த VR ஹெட்செட்டானது தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. இந்த VR ஹெட்செட்டுடன், Horizon Call of the Mountain (HCM) கேமையும் பண்டலாக சில ஆயிரங்கள் குறைவாகக் கொடுக்கிறது சோனி. முக்கிய சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அமேசான், ஃபிளப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் SC உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் இந்தப் புதிய ஹெட்செட்டானது தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சோனி பிளேஸ்டேஷன் VR2: வசதிகள் மற்றும் விலை
90Hz/ 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, OLED திரையைக் கொண்டிருக்கிறது புதிய சோனி பிளேஸ்டேஷன் VR2 ஹெட்செட். மேலும், 110 டிகிரி ஃபீல்டு ஆஃப் வ்யூைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட். ஆறு ஆக்சிஸ் மோஷன் சென்சிங் சிஸ்டம், IR ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் கருவிழிகளை ட்ராக் செய்ய IR கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய VR ஹெட்செட். இந்தியாவில் இந்த ஹெட்செட்டை ரூ.57,999 விலையிலும், Horizon Call of the Mountain கேமுடன் ரூ.61,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சோனி.