NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?
    டிபிடிபி சட்டத்தின் விதிகள் பதின்ம வயதினரைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைத் தடுக்கலாம்

    DPDP சட்டம்:சமூக ஊடக தளங்கள் கவலைகொள்ளும் இந்தியாவின் புதிய சட்டம் என்ன சொல்கிறது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 04, 2024
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்கான வரைவு விதிகளை உருவாக்கி வரும் இந்த நேரத்தில், ​​சமூக ஊடக தளங்கள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன.

    கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தச் சட்டம், டிஜிட்டல் தளங்களில் பதின்ம வயதினரின் நடத்தைக் கண்காணிப்பைத் தடைசெய்யும் விதியை உள்ளடக்கியது.

    இருப்பினும், இந்த கட்டுப்பாடு இளம் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைத் தடுக்கும் என்று சமூக ஊடக நிறுவனங்கள் வாதிடுகின்றன.

    அவர்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் பங்குதாரர்களுடன் சமநிலையான அணுகுமுறையைக் கண்டறிய விவாதித்து வருகின்றனர்.

    பயனர் பாதுகாப்பு

    DPDP சட்டத்தால் ஆபத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்

    டீனேஜர்களின் நடத்தையைக் கண்காணிப்பது அவர்களை வேட்டையாடுபவர்களிடமிருந்தும் ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் தொடர்புகளிலிருந்தும் பாதுகாக்க அவசியம் என்று சமூக ஊடக நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

    ஒரு தொழில்துறை நிர்வாகி எகனாமிக் டைம்ஸிடம், நடத்தை கண்காணிப்பு மீதான முழுமையான தடை, குழந்தைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு எதிரானது என்று கூறினார்.

    நடத்தை கண்காணிப்பு முடக்கப்பட்டால் எதிர்மறையான விளைவுகளுக்கு உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்-தனியுரிமை உத்தரவை மற்றொரு நிர்வாகி மேற்கோள் காட்டினார்.

    பாதுகாப்பு பணிகளுக்கு விதிவிலக்குகள் இல்லாமல், வேட்டையாடுபவர்கள் குழந்தைகளை குறிவைப்பதைத் தடுக்க தளங்கள் போராடும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    ஒப்புதல் சிக்கல்கள்

    பெற்றோரின் ஒப்புதல் மற்றும் விளம்பர சவால்கள்

    DPDP சட்டத்தின் பிரிவு 9, குழந்தையின் தரவைச் செயலாக்குவதற்கு முன், நிறுவனங்கள் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

    இவையெல்லாம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.

    எனினும், வழிகாட்டுதலுக்கான வரவிருக்கும் விதிகளை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

    மேலும் சரிபார்க்கக்கூடிய பெற்றோரின் சம்மதத்தை (VPC) கையாளக்கூடிய மூன்றாம் தரப்பினரை அரசாங்கம் அடையாளம் காணும் என்று நம்புகிறார்கள்.

    பெற்றோர்கள் தங்கள் ஐடிகளை பல நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதை விட டோக்கன் அடிப்படையிலான தீர்வு பாதுகாப்பானது என்று சமூக ஊடக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    வயதுக்கு ஏற்ற விளம்பரம் இல்லாமல், குழந்தைகள் பொருத்தமற்ற விளம்பரங்களைப் பெறக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

    சட்டம் தீர்மானம்

    சமூக ஊடக நிறுவனங்களுக்கு DPDP சட்ட சிக்கல்களைத் தீர்ப்பது மிகவும் முக்கியமானது

    நடத்தை கண்காணிப்பு, சரிபார்க்கக்கூடிய பெற்றோரின் ஒப்புதல் மற்றும் இலக்கு விளம்பரங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்றும் நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர்.

    இந்தக் காரணிகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வது, சமூக ஊடக தளங்களுக்கான தயாரிப்பு மாற்றங்கள், வருவாய் மற்றும் பயனர் வளர்ச்சி ஆகியவற்றின் மீதான தாக்கத்தைக் குறைக்க உதவும்.

    DPDP சட்டத்தின் எதிர்கால அறிவிப்புகள் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை முடக்குவதைத் தடுக்கக்கூடிய விதிவிலக்குகளை அறிமுகப்படுத்தக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமூக ஊடகம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சமூக ஊடகம்

    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஸ்மார்ட்போன்
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு மணிப்பூர்
    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசிக

    மத்திய அரசு

    'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு  கூகுள்
    ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள் கூகுள்
    மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு  இந்தியா
    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  தேர்தல் ஆணையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025