எக்ஸ் தளத்தில் உலகளாவிய பயன்பாட்டு சிக்கல், ட்ரெண்டிங்கில் 'Twitter Down' ஹேஷ்டேக்
உலகளவில் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படும் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் பயனாளர்களால் ட்வீட்களை பார்க்க முடியாத வகையில் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவது இயல்பு தான். இன்று காலை ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினையானது இந்திய பயனாளர்கள் மட்டுமல்லாது, உலகளாவிய எக்ஸ் பயனாளர்களையும் பாதித்திருப்பதாகத் தெரிகிறது. ட்வீட்டகளை பயனாளர்களால் பார்க்க முடியவில்லை, எனினும் ட்வீட்களை உருவாக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், ட்விட்டரில் பிரச்சினை ஏற்பட்ட சில நேரத்திலேயே 'Twitter Down' என்ற ஹேஷ்டேக் எக்ஸில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இது குறித்து இன்ஸ்டாகிராம் தளத்திலும் பயனாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.