ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இதை செய்திடுங்கள்! எச்சரிக்கை
இன்றைய நவீன டெக் உலகில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் பல பாதுகாப்பு விஷயங்களை மறந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த 9 விஷயங்களை நீங்கள் மறந்திருந்தால் உங்கள் போன் பாதுகாப்பானதில்லை என அறிந்துகொள்ளுங்கள். முதலில் பாஸ்வோர்ட் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்வது அவசியம். அடுத்து உங்கள் Mobile போனிற்கு வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும். சாப்ட்வேர் அப்டேட்டை மிஸ் செய்யாமல் அப்டேட் செய்யவும். ஆன்லைனில் ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட பாஸ்வோர்டை பயன்படுத்தவும். Openwifi நெட்வொர்க்குகளில் VPN ஐப் பயன்படுத்தவும்.
ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க செய்யவேண்டியவை
புகழ்பெற்ற ஆப்ஸ் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸ்களைப் டவுன்லோட் செய்யவும். உங்கள் டேட்டாவை லேப்டாப் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் இல் பேக் அப் எடுத்துவைக்கவும். உங்கள் போனில் ரிமோட் வைப்பிங் அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைக்கவும். உங்கள் போனில் செக்யூரிட்டி ஆப்ஸ் இருப்பது அவசியம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த அடிப்படை விஷயங்களை மறவாமல் தொடர்ந்து பின்பற்றுவது அவசியம். அதேப்போன்று, உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் பொழுது எப்போதும் நீண்ட நேரம் சார்ஜ் செய்யக் கூடாது. குறிப்பாக, 100% வரை சார்ஜ் செய்யும் பழக்கம் ஆபத்தானது. உறங்கும் போது இரவு முழுக்க சார்ஜ் செய்யும் பழக்கத்தை கைவிடுதல் சிறப்பானது.