டிண்டர் போலவே, லெப்ட்-ஸ்வைப் அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது ஸ்லாக் மொபைல்
ஸ்லாக் செயலி, 'கேட்ச் அப்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துயுள்ளது. இது, அதன் மொபைல் பயன்பாட்டில் உள்ள, படிக்காத மெசஜ்களை நிர்வகிப்பதை சுலுவாக்க, இந்த புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிண்டர் செயலியின் முக்கிய அம்சமான இந்த ஸ்வைப் அம்சத்தை, தனது செயலியில் அறிமுகம் செய்துள்ளது ஸ்லாக் - பயனர்கள் ஒரு மெசேஜை படித்ததாகக் குறிக்க இடதுபுறமாகவும், அன்-ரெட் (Unread) செய்ய வலதுபுறமாகவும் ஸ்வைப் செய்யலாம். ஸ்லாக்கின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநரான அக்ஷய் பக்ஷி கருத்துப்படி, கேட்ச் அப் இரண்டு பொதுவான பயனர் நடத்தைகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தில் AI ஒருங்கிணைப்பு
முதலாவதாக, ஸ்லாக்கில் உள்ள மெசேஜ்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில், பயனர்கள் அவற்றை படித்ததாகக் குறிப்பதற்காக ஒவ்வொரு சேனலையும் திறப்பது கடினமாக இருக்கும். அதற்காக இந்த வசதி மிகவும் உபயோகமாக இருக்கும் இரண்டாவதாக, பலர் தங்கள் டெஸ்க்டாப்பில் வேலையை துவங்கும் முன்னரும், காபி இடைவேளையின் போது மொபைலில் ஒரு 30-வினாடி ஸ்லாக் மெசேஜ்களை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களுக்கு இந்த ஸ்வைப்-அடிப்படையிலான அம்சம், பயன்பாட்டை நெறிப்படுத்தவும், மேலும் சுவாரஸ்யமாக இருக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கேட்ச் அப் மூலம் இன்னும் பல எதிர்கால மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்லாக் அதிகாரி தெரிவித்துள்ளார். உதாரணமாக AI ஐ உடன் ஒன்றிணைப்பது போன்ற வேலைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.