மொபைல் இன்டர்நெட் சீக்கிரம் காலியாகிவிடுகிறதா? தடுக்க சூப்பர் டிப்ஸ்!
உங்கள் மொபைல் ஃபோனில் நெட்வொர்க் சிக்கல்களை எதிர்கொண்டால், விரைவில் உங்கள் மொபைல் இன்டர்நெட் தீர்ந்து போனால், என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். ஏரோபிளேன் மோட் சிக்னல் பிரச்சினை அல்லது மொபைல் டேட்டா கனெக்ட் ஆகவில்லை என்றால் airplane mode-ஐ ஆன் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஆன் செய்தால் கனெக்ட் ஆகிவிடும். இந்த ட்ரிக்கை பயன்படுத்தலாம். சிம் கார்ட் மாற்றி அமைக்கவும் மொபைல் டேட்டா கனெக்ட் ஆவதில் பிரச்சினை இருப்பின் மொபைல் சிம் ஸ்லாட்டை ஓபன் செய்து சிம்மை எடுத்து துடைத்துவிட்டு பின் மீண்டும் இன்ஸ்சர்ட் செய்துவிடுங்கள். இப்பொழுது சரியாகிவிடும்.
இன்டர்நெட் மற்றும் நெட்வொர்க் பிரச்சினை தடுக்கும் வழிமுறைகள்
இரண்டு சிம் பிரச்சினை இப்பொழுது உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலுமே இரண்டு சிம் வசதி தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்மில் நெட்வொர்க் பிரச்சினையை எதிர்கொண்டால், மற்றொரு சிம்மில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். மொபைல் டேட்டா காலியாகிவிடுகிறதா? அடிக்கடி வீடியோ பார்ப்பவர்கள் HD தரத்தில் வீடியோவை ஆட்டோமோடில் வைத்து பார்க்கின்றனர். இதனால் இன்டர்நெட் சீக்கிரம் காலியாகிவிடுகிறது. இதனால், அடிக்கடி எந்த குவாலிட்டியை தேர்வு செய்கிறோம். என்பதை சரிபார்ப்பது உதவியாக இருக்கும். ஆப்ஸ் அப்டேட் பலரும் ஆப்ஸ்களை அதிகமாக பதிவிறக்கி அதற்கான அப்டேட்ஸ்களை அடிக்கடி செய்தும், அல்லது தானாகவே டவுன்லோட் ஆகக்கூடிய தேர்வில் வைத்து விடுகின்றனர். இதனால் மொபைல் டேட்டா சீக்கிரமாக காலியாகிவிடும். எனவே, ப்ளே ஸ்டோர் சென்று auto updated off என்பதை தேர்வு செய்து வைக்கவேண்டும்.