5G க்கான டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ
இந்தியா முழுவதும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் தங்களது 5G சேவையை செயல்படுத்த துவங்கியுள்ளது. அதில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனம், தனது முதல் 5ஜி டேட்டா பேக்கை, ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அறிவித்துள்ளது. அதை ஜியோ தளத்திலோ, My Jio ஆப்ஸிலோ அணுகலாம். ரூ.61 விலையில் அறிமுகம் ஆகி இருக்கும் இந்த ஜியோ திட்டம், ஒரு கூடுதல் டேட்டா பேக் ஆகும். இந்த டேட்டா திட்டத்துடன், உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்வதன் மூலம், பயனர்கள் தங்கள் மொபைலில், 5ஜி வேக டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டம், 6 ஜிபி வரை மொபைல் டேட்டாவை வழங்குகிறது.
ஜியோவின் 5G சேவை
ஜியோ இணையதளத்தின்படி, இந்தத் திட்டம் பின்வரும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பொருந்தும் - Rs.119, Rs.149, Rs.179, Rs.199 மற்றும் Rs.209. இந்த 5ஜி டேட்டா ஆஃபர், 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட நகரவாசிகளுக்கு மட்டுமே பொருந்தும். சமீபத்திய வெளியீடுபடி, ஜியோ 5G கிடைக்கக்கூடிய நகரங்களின் மொத்த எண்ணிக்கையை 85 ஆகும். நாட்டிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் தனது 5G சேவையை ஆரம்பித்து விட்டது ஜியோ. டிசம்பர் 2023 க்குள், நாடு முழுவதும், முழுமையான 5G உடன் இணைக்க ஜியோ திட்டமிட்டுள்ளது என, சென்ற ஆண்டின் இறுதியில் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.