ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி!
மூத்த சேமிப்பு குடிமக்களுக்கான திட்டம் என்பது வயதானவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமானது இந்த மாத இறுதிக்குள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதில், மூத்த குடிமக்களுக்கு நல்லதொரு வருமானத்தினை கொடுக்கும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்களாகவும் பார்க்கப்படுகின்றன. இதனிடையே, மூத்த குடிமக்களுக்கான இந்த பிரத்யேக திட்டமான SCSS திட்டத்திற்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடந்த 2022, 23ஆம் நிதியாண்டில் மூன்றாவது காலாண்டிற்கான வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% ஆக உள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி விகிதம்
மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கும் விதமாக பட்ஜெட் 2023இல், 15 லட்சம் ரூபாயில் இருந்து, 30 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மூத்த குடி மக்கள் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், வட்டி விகிதமாக மாதத்திற்கு 20,000 ரூபாய் வரையில் வருமானம் பார்க்க முடியும். அதுவே, மூத்த குடிமக்கள் கணவன் மனைவி இருவரும் இணைந்து முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால், மாதம் 40,000 ரூபாய் வரையில் வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். மேற்கொண்டு 3 ஆண்டுகளுக்கும் நீட்டித்துக் கொள்ள முடியும். மொத்தத்தில் இவை, சந்தை அபாயம் இல்லாமல், நல்ல லாபகரமான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.