
வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா?
செய்தி முன்னோட்டம்
வருமான வரி செலுத்துவோர் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி யோசிப்பார்கள்.
ஆனால் இங்கு குறிப்பிட்ட 7 நாட்டு மக்கள் மட்டும் அந்த கவலையே இல்லாமல் இருப்பார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உட்பட இன்னும் சில நாடுகளில் உள்ள மக்கள் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை.
UAE
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் பொருளாதார, கல்வி முறை, சுகாதாரம் என அனைத்திலும் அதன் மக்களுக்கு அந்நாட்டு அரசு சிறந்த வசதிகளை வழங்கியுள்ளது.
அங்கு முக்கிய ஆதாரமாக எண்ணெய் வளம் உள்ளதால், அதனால் அந்நாட்டு மக்கள் அவர்களின் தனிப்பட்ட வருமானத்திற்கு வருமான வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
மொனாக்கோ
உலகில் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ, தரைக்கடலில் அமைந்துள்ள மிக அழகான நாடாகும்.
வருமான வரித்துறை
வருமான வரியே செலுத்தாத நாடுகள் என்னென்ன?
அதிலும் வாழ விலை உயர்ந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நாட்டு, மக்கள் எவ்வித capital gains taxes மற்றும் wealth taxes போன்ற வரிகள் செலுத்தத் தேவையில்லை.
கத்தார்
எண்ணெய் வளங்களை கொண்ட இணைந்த நாடு, இங்கும் மக்கள் அவர்களின் வருமான வரியைச் செலுத்தத் தேவையில்லை.
ஆனால், அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கு வரி செலுத்த வேண்டும்.
குவைத்
இங்கும் தனிநபர் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் சமூக பாதுகாப்பிற்கு அங்குள்ளவர்களுக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
பெர்முடா
பெர்முடாவில் இங்கு தனிநபர் வருமான வரி இல்லை. ஆனால் இந்நாட்டில் வாட் வரி (VAT), கார்ப்பரேட் வரிகள், விற்பனை வரிகள் செலுத்த வேண்டியதில்லை.
குறிப்பாக, முதலாளிகள் ஊதிய வரி செலுத்த வேண்டியதில்லை.