வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர். அதன்படி, பான் ஆதார் எண்ணுடன் இணைத்தல், புதிய ஐடிஆர் தாக்கல் செய்தல், முன்பண வரி செலுத்துதல், வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்தல் போன்ற பிற பணிகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இவை அனைத்து செய்யும் பட்சத்தில் வரி செலுத்துவோர் அபராதம் மற்றும் பல்வேறு சிக்கல்களிலிருந்து தப்பிக்க உதவும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சில எளிய செயல்முறைகளை உறுதிசெய்வது வரியைச் சேமிப்பதில் தனிநபர்களுக்கு உதவும். முதலில் வரி செலுத்துவோர் ELSS, PPF, NPS, EPF, வரி-சேமிப்பு நிலையான வைப்புத்தொகைகள் மற்றும்.,
வருமான வரி சேமிப்பு - மார்ச் 31-க்குள் செய்யவேண்டியது என்ன?
பிரிவு 80C இன் கீழ் மற்ற கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1,50,000 வரை விலக்கு கோரலாம். அடுத்து, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், முதலீடு செய்வது, வரிகளைச் சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாகும். வரி செலுத்துவோர் பிரிவு 80சியின் கீழ் ரூ. 1.5 லட்சத்திற்கு கூடுதலாக ரூ.50,000 கூடுதல் விலக்கு கோரலாம். தொடர்ந்து, வரி செலுத்துவோர் தங்கள் குடும்பத்திற்கு உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்திற்கு எதிராக ரூ. 25,000 வரை விலக்கு கோரலாம். மேலும், கடைசியாக வரி செலுத்துவோர் தங்கள் வரிகளை முன்கூட்டியே செலுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும். வரிப் பொறுப்பு, TDS இன் நிகரமாக, 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வட்டி அபராதத்தைத் தவிர்க்க அவர்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்த வேண்டும்.