2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,
விலக்குகள் பெற ஈஸியான வழிகளில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம். அது எப்படி எல்லாம் வரி என தெரிந்துகொள்வோம்.
மார்ச் 31 வரை விலக்குகளைப் பெறுவதற்காக, PPF, NPS, 5 ஆண்டு FD போன்ற சில வரிச் சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்யலாம்.
அவற்றில் பெரும் வரிச் சலுகைகளுக்கான திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) தான்.
இது, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது தனிநபர்களுக்குப் போதுமான ஓய்வூதியத் தொகை பெறுவதற்கும் ஏற்பாடு செய்கிறது.
ஓய்வூதிய திட்டம்
NPS புதிய திட்டங்கள் என்னென்ன?
மேலும், கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, NPS முறையான ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் வரிச் சலுகைகளுடன் ஓய்வூதிய கார்பஸை உருவாக்குகிறது.
வரிச்சலுகை என்று எடுக்கும் பொது பழைய வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிதளவில் கைகொடுக்கும்.
பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு விலக்கு பெற முடியும்.
மேலும், ஒரு பணியாளரின் NPS கணக்கிற்கு ஒரு முதலாளி பங்களித்தால், பிரிவு 80C இன் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளுடன், பிரிவு 80 CCD(2) இன் கீழ் பணியாளர் விலக்குகளைப் பெறலாம்.
NPS என்பது உலகின் மிகக் குறைந்த விலை ஓய்வூதியத் திட்டங்களில் ஒன்றாகும். சிறிய அளவு முதலீடு செய்வதன் மூலம் இறுதியாக பெரிய அளவில் பென்ஷன் கிடைக்கும்.