சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா?
சாம்சங் மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் உண்டாகிறது. அதை சரிசெய்ய அந்நிறுவனங்களும் கடுமையாக உழைக்கின்றன. இந்த நிலையில், கூகுள் பிக்சல் சீரிஸ் மாடல்கள், சாம்சங் கேலக்ஸி சீரிஸ் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இந்த போன்களில் பயன்படுத்தப்படும் Exynos மோடம்கள் தான் காரணம் எனவும் கண்டறிந்துள்ளனர். எனவே, சாம்சங் எக்ஸினோஸ் மோடம்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டை கூகுளின் பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவான ப்ராஜெக்ட் ஜீரோ கண்டறிந்தனர்.
சாம்சங் கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட குறைபாடு - சரிசெய்வது எப்படி?
இந்த சிக்கல்களை ஹேக்கர்கள் சாதகமாக்கி கொள்ள முடியும் என தெரிவிக்கிறார்கள். இதனால் மொத்தம் 18 பாதிப்புகளை கண்டறிந்துள்ளனர். அதில், 4 பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். இதில் ஒன்று இன்டர் நெட் டு பேஸ்பேண்ட் ரிமோட் கோட் செயல்படுத்தலை அனுமதிக்கிறது. அடுத்து, Mobile network சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது. சாம்சங் போன்களை தவிர விவோ போன்களும் இந்த பாதிப்பால் தாக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு தீர்வு என்னவென்றால், விற்பனையாளர்களிடம் இருந்து நிரந்தர திருத்தம் வருவதற்கு முன்னரே wifi மற்றும் voice over LTE ஆஃப் செய்து வைத்துகொள்வது பாதுகாப்பானது. பாதுகாப்பு அப்டேட் தரும் வரை இதை மட்டுமே செய்யமுடியும்.