மூன்று விதமான S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவிருக்கும் சாம்சங்
தங்களுடைய ஃப்ளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான சில மாதங்களுக்குப் பின்பு, அதன் குறைந்த ப்ராசஸிங் பவர் கொண்ட விலை குறைவான FE வெர்ஷன் ஒன்றை சாம்சங் வெளியிடுவது வழக்கம். கடைசியாக 2022 ஜனவரியில் S21 சீரிஸின் FE வெர்ஷனை வெளியிட்டது சாம்சங். அதனைத் தொடர்ந்து 2022 பிப்ரவர் மாதம் S22 சீரிஸை வெளியிட்டது சாம்சங். ஆனால், S22 சீரிஸின் FE வெர்ஷன் வெளியிடப்படாமல், இந்த ஆண்டு நேரடியாக S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது சாம்சங். தற்போது S22 FE வெர்ஷனைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக S23-யினஅ FE வெர்ஷனை விரைவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மூன்று விதமான சிப்செட்களைக் கொண்ட உருவாக்கப்பட்டிருக்கும் சாம்சங் S23 FE:
தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, அடுத்த சில வாரங்களில் நடைபெறவிருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்விலேயே இந்த S23 FE அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. மேலும், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டைக் கொண்ட ஒரு மாடலையும், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டைக் கொண்ட மாடல் ஒன்றையும், எக்ஸினோஸ் 2200 சிப்பைக் கொண்ட மாடல் என மூன்று மாடல்களில் S23 FE-யை உருவாக்கியிருக்கிறது சாம்சங். இதில் ஒரு ஸ்னாப்டிரான் 8 சிப்பைக் கொண்ட மாடலானது வடஅமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கானது எனக் கூறப்படும் நிலையில், மற்ற இரு மாடல்களை உலகின் மற்ற நாடுகளில் சாம்சங் விற்பனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்பைக் கொண்ட மாடலே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.